மண்பானையை பார்த்ததுண்டா?
வாங்க ஒரு குட்டி கதை கேட்கலாம், சிரமம் பார்க்காமா என்னோட தக்ஷினா சித்ரா போகலாம் வாங்க, இது என்ன சிறு பிள்ளதனமா இருக்கு! ரோட்டு சைட் கடையில் அப்புறம் வீட்ல தண்ணி வைக்க கூட யூஸ் பண்ணுவாங்களா. அப்படின்னு பலபேர் நினைச்சிருக்களாம்; மண்பானையை செய்யறதா பார்த்திருக்கீங்களா?
வாங்க ஒரு குட்டி கதை சொல்றேன்.
ஐயா ஜாலி! பள்ளியில் சக மாணவர்களுடன் பயணம் செல்வது ஒரு அற்புதமான அனுபவம். பிஸ்கட் நொறுக்குத் தீனி ஜூஸ் போன்றவற்றை பட்டியலிட்டு தோழர்கள் ஒருவருக்கும் இதைக் கொண்டு வருமாறு ஒதுக்கீடு செய்து பயணத்திற்குரிய நாளிற்காக காத்திருப்போம்.
அது ஒரு கனாக்காலம்!
தக்ஷின்சித்ரா
எனது முதல் பள்ளி பயணம்!
‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே…’
சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் கிழக்குக்கரை சாலையில் அமைந்துள்ளது தக்ஷின்சித்ரா. அரசுப் பேருந்துகள் மூலம் இந்த இடத்தை அடையலாம். நகரப்புறமான சென்னையில் கிராமப்புறத்தை ரசிக்க வேண்டுமென்றால் தக்ஷின்சித்ரா வாருங்கள்.
தக்ஷின்-தெற்கு; சித்ரா- படங்கள் தென்னிந்தியாவை படம் பிடித்து வைத்திருக்கும் இடமே தக்ஷின்சித்ரா. படம் என்றால் சாதாரண சுவற்றில் மாட்டப்படும் படங்கள் அல்ல உண்மையான காட்சியளிக்கும் மாதிரிகள்.
தென்னிந்தியாவின் வீடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை ஊர் ஊராக சென்று காணாமல் இந்த ஒரே இடத்திலேயே காணலாம். நகரவாசி ஆகிய நான் முதல் முறையாக மாட்டுவண்டியில் சவாரி செய்த இடம் தக்ஷின்சித்ரா.
மண்பானை:
வீடுகளை இரசித்த பின் மாட்டு வண்டியில் சவாரி செய்து ஒரு பெரிய குடிசை வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். அங்கே அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது.
ஒரு முதியவர் எங்களுக்காக ஒரு இயந்திரத்துடன் காத்திருந்தார். பள்ளி வகுப்புகளில் ஒரு முந்திரிக்கொட்டை இருக்குமல்லவா! அந்த முந்திரிக்கொட்டை அவரிடம் யார் என்று கேட்டது?
குயவன் என்று பதிலளித்தார். பதிலளித்த பின்னும் எங்களுக்கு யார் என்று புரியவில்லை. நேரம் கடந்தது அவர் யார் என்ன செய்யப் போகிறார் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
அந்த நேரம் வரை இல்லாத வழிகாட்டி திடீரென்று முற்பட்டு ‘இவர் இப்போது பானை செய்யப்போகிறார் மண்பாண்டங்களை செய்பவர்களை குயவன் என்று நாம் குறிப்பிடுவோம்’ பள்ளிப் பருவத்தில் இருந்த எங்களுக்கு தெளிவாக புரியும் படி விளக்கினார்.
பானை செய்யும் இயந்திரத்தில் ஒரு சக்கரம் கீழே சுழல அதன்மேல் களிமண்ணை வைத்து அழகான பானை செய்தார். எங்கள் கூட்டத்தில் இருவரை அழைத்து பானை செய்யவும் கற்பித்தார்.
அதிர்ஷ்டம்! அவங்களுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு. எனக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்கல.
சுற்றிப்பார்த்து முடிந்த பிறகு கடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது அனைவரும் சுற்றிய களைப்பில் ஜில்லென்ற ஜூஸ் குடிக்க என் கண்கள் என் வீட்டாருக்கு அன்பளிப்பாக எதை வாங்குவது என அலை பாய்ந்தது. அந்தத் தேடலிலும் குயவனின் கையும் அந்த இயந்திரத்தின் சக்கரமும் மண்பானையும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அந்த அனுபவம் மற்றும் பயணத்தின் நினைவாக களிமண்ணாலான விநாயகர் சிலையை என்னுடன் அழைத்து வந்தேன்.
புகைப்படக் கருவி கையில் இல்லாத சமயத்தில் சென்ற பயணத்தால் மனதில் கொண்ட படங்களை கொண்டு எழுதி உள்ளேன். நான் அன்று வாங்கிய விநாயகர் சிலை இதோ.
More Stories
బామ్మ కథ “బంగారు మురుగు”
చంద్రగిరి శిఖరం
అజరామరమైన అమరావతి కథలు..