September 28, 2023

நம் முப்பாட்டன் முறுக்கு மீசை பாரதி

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே என  ஆவன்னா எனக்கு கற்றுக் கொடுத்தது என்னவோ  நம்முப்பாட்டன் முறுக்கு மீசை பாரதி ஆவார்.  தாய் மொழியில் கவி இயற்றும் நமது தேசியக்கவி பாரதிக்கு  தமிழ்,  ஆங்கிலம், சமஸ்கிருதம் வங்காளம் ஆகியவை கற்றறிந்த போதிலும்  “யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழிபோல் இனிதாவது  எங்கும் காணோம்  என்று தாய்மொழியாம் தமிழின் காதல் வெளிப்படுத்தியிருப்பார். 

மகாகவி பாரதி:

இவர் தேசப்பற்றுடன் நாட்டு விடுதலைக்காக பல்வேறு கவிதைகளை இயற்றினார்.  இவர் பெண்ணியத்திற்கு பெரும்  மதிப்பு கொடுத்து பெண்களுக்கு என ஒரு புரட்சிப் பாதை உருவாக்கினார். பாரதியின் புதுக்கவிதை  படிப்போர்க்கு அறிவு, ஞானம், எழுச்சி சிந்தனை ஆகிய அனைத்தும் ஒரு சேர செயல்படும். சுய சிந்தனையை தூண்டும் பாரதியின் கவிதைகள்  சிந்தனையை சீராக்கும்.

சோசியல் மீடியாவை சோர்வடையும் பாரதியின் பைந்தமிழ்:

மந்தம் போக்கும் மாமருந்து பாரதியின் எழுத்துக்களில் இருக்கின்றது. எழுச்சி என்றால்  நமக்கு சினிமாவில் காட்சிகளில்தான்  கிடைக்கின்tது என்கிறோம். ஆனால் பாரதியின் எழுத்துக்களில் உண்டு மாபெரும் எழுச்சி அதனை நாம் முழுமையாக உணர வேண்டும்.

எத்தனை எத்தனை புதுமைகள் செய்கின்றோம் டிஜிட்டலில் முறுக்கு மீசை பாரதிக்கு ஒரு டிஜிட்டல்  உலகில்  உயிர் கொடுப்போம். சோசியல் மீடியாவில் நாங்க பாக்காத  படைப்பா என்று நீங்க கேட்பது என் காதில் விழுகின்றது. பாரதி ஒருவர் இருந்தால் ஒட்டுமொத்த சோசியல்  மீடியாவும் சோவென தமிழ் மழை கொட்டு  எட்டுத்திக்கும் அவர் தமிழ் முரசு கொட்டும். சமூக வலைதளங்களான சோசியல் மீடியாக்கள் எல்லாம் சோ!…. போதும்பா என்று புலம்ப வைத்திருப்பார்.

bharathiyar3446-1559627774

சின்னஞ்சிறு கண்ணம்மா என அவர் பாடினால் நம்மை  அழைப்பதுபோல் இருக்கும். ஓடி விளையாட கற்றது என்னவோ அவர் பாடலில்தான். ஒருவரையும் பொல்லாங்கு பேசாதே என கேட்டதும் அவர் வரியில்தான்.  இன்னும் எத்தனை எத்தனையோ இருக்கும் எம் முப்பாட்டன்  முண்டாசுக்கவியிடம்  காண்போம் வாங்க.

%d bloggers like this: