பாரதியார் 1882 ஆம் ஆண்டு செப்டம்பர்11 ஆம் தேதி பிறந்தார். நம் முண்டாசுப் பாரதி புதுக்கவிதைக்கு புத்துயிர் கொடுத்தவர் வாழ்க்கையையே மாற்றியவர். பொது சிந்தனைகள் கொண்டவர் புதிதாக கற்க ஆசை கொண்டவராக இருந்தார்.
“தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்று கீரை என பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேனென்று நினைத்தாயோ
இதுபோன்ற எழுச்சி மிகு உணர்ச்சி கவிகள் நமக்கு கொடுத்து தமிழரின் தமிழின் சுவையை தனது வார்த்தைகளால் கோர்த்து அவற்றுள் நம்மைத் தேடச் செய்தவர். மகாகவி பாரதி இவர் ஒரு புதுமை கவி நாயகன், இருக்கட்டும் அதுக்கென்னப்போ என்றால், எப்பொழுதும் அவர் வரிகளில் வாழ்வு இருக்கும் புதுமை பிறப்பு இருக்கும்.
வெள்ளையனுக்கு தமிழ் வேட்டு:
வெள்ளையனுக்கு வேட்டு வைத்து, ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய விடுதலைப் போராட்டத்தை தனது பாரதப்போர் என அறிவித்து பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த பாஞ்சாலி சபதம் படிக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் உடலில் உள்ள நாடி நரம்பு ரத்தம் இவை அனைத்தும் ஒன்று சேரும் சுண்டி இழுக்கும், அவருடைய படைப்புகள் பாஞ்சாலி சபதத்தின் பக்குவமாய் நமக்கு எடுத்துக் கொடுக்கும்.
ஆண் பெண் பெயரில் பாரதி:
நம் முப்பாட்டன் பாரதியின் பெயரை மட்டும் ஆண்-பெண் என யார் வேண்டுமானாலும் சூடிக் கொள்ளலாம் ஆண்-பெண் வேறுபாடுகளை கலைந்து நிற்கச் செய்து முப்பாட்டன் பாரதிதான், இவரின் புதுமைப்பெண்கள் என்ற ஒரு பரந்த பார்வை பெண்களுக்கு கொடுத்ததும் பாரதிதான்.
சுந்திர போராட்ட காலத்தில் தேசிய உணர்வை நமது தேகத்தில் ஓடச் செய்த மாபெரும் கவி நமது மகாகவி, பாரதிக்கு மட்டும் எத்தனை தமிழ் வார்த்தைகளை கொண்டு பார்த்தாலும் பணம் கொடுத்தாலும் அவை நம்மைக் திகட்டாத படிக்கச் செய்யும் நமது முப்பாட்டன் பாரதி பல மொழிகளை கடந்து சென்றவர்.
தேசிய உணர்வுகள் மிக்க வரிகள் அவரை தேசியகவி ஆக்கி நம்மை எழுச்சிப்பெறச் செய்தது.
பாரதமாதாவை துயில் எழச் செய்த கவிகள்:
மண்ணும் இமயமலை எங்கள் மலையே, மாநிலமீதிதுபோல் பிரிவிலேயே என்று பாரத புகழ் பாடியவர் என் பாரதி பாரதியின் தேச காதல் பாரத மாதாவையும் துயில் எழச் செய்தது எனலாம்.
வந்தே மாதரம் என்போம்
எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்
பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்வோம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்,
மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்!
என்று நதிநீர் இணைப்பு
சிந்தனைகளை எல்லாம் சிறைப்பிடிப்பதில் பாரதிக்கு நிகர் பாரதிதான். இதோ இந்த புதுயுகபாரதி சோபனாவின் ஒரு வாழ்வாதார தமிழாக இருந்ததும் பாரதிதான். பாரதியின் பாதி தமிழில் பிறந்தற்கு இந்த ஆட்டம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பாரதியில் எழுத்தில் இருக்கும் காந்த சக்தியின் மகிமையை நாம் அறிய வேண்டும். புரிய வேண்டும், உருக வேண்டும் உருவகப்படுத்த வேண்டும். ஒரு நாள் படிச்சுப்பாருங்க அந்த வரிகளின் வசந்ததை அதன்பின் சொல்லுங்கள் எனக்கு பதிலை.
More Stories
బామ్మ కథ “బంగారు మురుగు”
చంద్రగిరి శిఖరం
అజరామరమైన అమరావతి కథలు..