இவன் நகரத்து பிளே பாய் கல்லுரியில் படித்துகொண்டிருக்கிறான் . புதிதாய் கல்லுரியில் அவள் புதிதாய் வந்து இணைகிறாள் கவிதா ஓரு இராணுவ அதிகாரியின் மகள் கம்பீரமும் துடுக்கும் நிறைந்த பெண்ணவள்.
கல்லுரிக்கு வந்த முதல் நாளே தனது சீனியர்களை பகைத்து கொண்டாள் டிபார்ட்மெண்ட் சல்யூட் வைக்க சீனியர்கள் பணித்த போது துடுக்கான இளம் வயது பெண்ணான கவிதா பெரியவர்கள் மற்றும் தேசிய கொடியை தவிர தான் எதற்க்கும் தலைவணங்க போவதில்லை என அவர் தெரிவிக்க அந்த முதலாமாண்டு வகுப்பறையே ஆடிபோய்விட்டது. இவளை பார்த்து அனைவரும் நடுங்கி போய்விட்டனர் . ஆனால் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பெருமிதமான விடையாக தெரிந்தாலும் கோவம் எத்தனித்தது உன்னை வெல்கம் பார்ட்டியில் பாத்துகிறோமுனு சொல்லிவிட்டார்கள்.
இதனை பெரிதாக அலட்டிகொள்ளாத கவிதா அடுத்த வகுப்புக்கு தயாராகி கொண்டிருக்க அனைத்து வகுப்பு மாணவர்களும் மாணவிகளும் பாராட்ட நன்றி தெரிவித்து அமர்ந்தால் அப்போது கூட்டத்தோடு அவளது வகுப்பு சக மாணவன் அவளை உற்று நோக்கியது கண்டாள் . அவனின் பார்வை வேகம் அறிந்து தன்னை திசை திருப்பினால் .
வகுப்பில் தவறாது பாடங்களை கவனிப்பது. கல்லுரிக்கு முறையாக வருவது தவறு செய்ய வாய்ப்புகள் வாய்த்தும் அவற்றை பயன்படுத்தாமல் கல்லுரியில் சிறப்பாக செயல்படுவாள். கல்லுரிகளுக்கிடையே பேச்சு போட்டி, கவிதை என அனைத்திலும் பங்குகொள்வாள் ஒரு நொடிபொழுது கூட வீனடிக்க விரும்பாத கவிதா எதையாவது கற்றுகொள்வதில் ஆர்வம் அதிகம் கொண்டவள். நூலகமும் வகுப்பறையும் கல்லுரி வலாக மரங்களுமே சுற்றி வளைய வருவது அவளது விருப்பமாகும்.

ஒருநாள் மிக கணமான புத்தகங்கள் இரண்டை எடுத்து வரும் வழியில் முன்னே இருவர் இருப்பது காணாது தடுமாறி புத்தகங்களை அவர்கள் தலையில் போட சட்டென்று எழுந்தனர் . மன்னிக்கவும் என பயந்து கூறி முகம் பார்த்தால் அந்த இரு கண்கள் மீண்டும் அவளை நோக்கியது அவளும் பார்த்தால் மீண்டும் அதே மின்னல் அவன் கண்களில் இருப்பதைக் கண்டு சாரியென்று விலகிவிட்டால் . கவிதாவிற்கு நேர் எதிராகவே அமர்ந்தான் பரத் அவளுக்கு எதோபோல் இருந்தது . ஒரு வார்த்தையுமில்லை ஆனால் அவன் கண்களில் மின்னலுடன் அவளது கண்களை நோக்கியே இருந்தது . அந்த பார்வையின் அர்த்தம் பிடிப்படாமல் நூலகத்தைவிட்டு வீட்டை நோக்கி செல்ல பேருந்தில் பயணிக்க அங்கும் பயணித்தான் பரத் . போதுமடா சாமி நிறுத்து உன் பார்வையை என்று கண்ணால் அவள் கூற முடியாது எனும் தொனியில் அவனும் தொடர்ந்து பார்க்க இவள் திரும்பி கொண்டாள் . ஆனால் அவன் அவள் திருப்புவாள் என்று காத்திருந்தான் ஆனால் அது நடக்கவில்லை . வீடு வந்தது விருட்டென்று இறங்கினால் தெருவில் நடக்கும் போது ஒரு சந்தேகம் தொடர்கிறானோ என ஆனால் திரும்பி பார்க்க தயக்கம் வேறு வழியின்றி திரும்ம்பி பார்க்கிறாள் ஆனால் அவன் பின் தொடரவில்லை . பெருமூச்சு விட்டுவீட்டை அடைகிறாள் . உள்ளே நுழைந்ததும் பாட்டி , சித்தி, அத்தை, என அனைவரும் வந்திருக்க ஆனந்ததில் அனைத்தையும் மறந்து கொண்டாட்டத்தில் திளைத்தால் ஆனால் அவளுக்குள் ஹார்மோன்கள் கிளர்ச்சி அவள் உணர்ந்து கொண்டால் . உறங்கவும் சென்றால் ,,,,

மீண்டும் மறுநாள் கல்லுரி நினைத்தாலே பயம் படபட்ப்பு மீண்டும் பரத் தன் கண் முன்னே வந்துவிடுவானோ என்ற எண்ண சிதறல்கள் இடையே எல்லையில் இருந்து குருவேஸ் அப்பா அழைக்கிறார் ,ஹாய் மைடிய்ர் சைல்ட் ஹவ் ஆர் யூ என கேட்க இவள் சற்று நேரத்தில் ஆனந்தமாகி அப்பா ஐ எம் குட் வாட் அபோட் யூ அண்ட் ஔர் டீம் என வீரம் பொங்க கேட்கிறாள் . “ஆல் ஆர் ஆஸம் டியர், மிஸ் யூ” என அப்பா கூற,
இவளும் “மீடூ டாடி” என்கிறால் கல்லுரி எப்படி என அப்பா கேட்டதுதான் தாமதம் உடனே அந்த பரத் வந்து கண் முன்னே நிற்க அப்பாவிற்கு பதிலளிக்காமல் நிற்கிறாள் அவளின் கனவு பார்வையை கண்டு அம்மா இங்க கொடுடி என்று அழைப்பை பிடுங்க அப்பாவும் மகள் கல்லுரிக்கு செல்லும் அவசரத்தில்இருப்பதை உணர்ந்து கவிதா தாயுடன் பேசுகிறார். கனவு பாதையில் பயணிக்கும் கவிதா வகுப்பறைக்குள் முதல் ஆளாக நுழையும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வகுப்பறைக்குள் நுழைய அங்கே பரத் அமர்ந்திருக்கிறான் . அவளை கண்டதும் அதே பார்வை “ஒரு குட்மார்னிங் இல்ல பார்த்தே சாகடிக்கிறான்”, என்று உள்ளுக்குள் உறைத்து அமர்ந்தாள் கவிதா, “ உன்னை பார்க்கும் நொடியில் என்னை மறக்கிறேன், உன் வீரம் செரிந்த வார்த்தைகள் என்னை மவுனியாக்குகிறது”, என கிறுக்குகிறான் பரத் .. வெகுநேரம் களித்து மற்ற மாணவ மாணவியர் வர இவன் அவளை பார்த்தவண்ணமே நிற்க வெறுத்து போகிறாள், “கவிதா ஷ்ஷ்ஷ்… போதும் பா பிளிஸ்” என தன் பார்வையை அவனை நோக்கி செலுத்தி, தன்னை புத்தகத்திற்க்குள் புதைத்து கொண்டாள் ஆனால் பரத்திற்கு அவள் இமைகளை தவிர மற்ற அனைத்தும் தென்ப்படவில்லை. சற்று நேரத்தில் அவனது நண்பர்கள் வர பார்வையை திசை திருப்பினான் பரத். அப்படா என பெருமூச்சு விட்டு குருநகை படர்ந்தால் அதனை நண்பர்களிடம் பேசிகொண்டே கவனித்தான் பரத். இறுதியாக இரு இமைகளும் கவியரங்கில் பேசின அப்போது முதல் ஆழ்ந்த நட்புடன் பழகினார்கள் இருவரும் அது காதலாக பரத்தினால் அறிவிக்கப்பட்ட போது அதனை ஏற்க மறுத்தால் கவிதா. ஆனால் பரத்தின் பொறுமை அவளை ஏற்க வைத்தது . ஆறு மாதம் காதலும் நட்பும் கலந்த வாழ்க்கை சென்றது.
இருவரும் இரண்டாமாண்டு அடியெடுத்து வைக்க அப்போது புதிதாக ஒரு பெண் மாலினி வந்து இணைகிறாள் அவர்கள் கல்லுரியில் இரண்டாமாண்டு இதற்கு முன் வேறு கல்லுரியில் ஒரே பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் கல்லுரிகள் என்பதால் மாலினி கல்லுரியில் பரத் கவிதா படிக்கும் அதே வகுப்பில் இணைந்தால் மாலினியும் நல்ல குணம் படிப்பறிவு கொண்டவள் கவிதாவை போல் சிறந் மாணவி. வகுப்பில் நட்புடன் பழகிய மாலினி கவிதா மற்றும் பரத்துடன் நெருங்கிய நட்பினால் பரத்துடன் மிகுந்த நெருக்கமான நட்பு வளர்த்தால், அதனை பரத்தும் அவன் மீது கொண்ட நம்பிக்கையால் கவிதாவும் பெரிதுப் படுத்தவில்லை. ஆனால் ஒருநாள் இந்த நட்பின் போக்கு மாலினி தரப்பில் காதலாக படர்ந்தது. அதனை அவளும் தெரிவித்தாள் கவிதாவும் பரத்தும் விரும்புவது தெரிந்தும் மாலினி பரத்தை விரும்புவதை தெரிவித்தாள், அது முறையல்ல என்று தெரிந்தும் பரத் விலகினான் ஆனால் மாலினி பரத்தை விடவில்லை ஆசை வார்த்தைகளும் சாமார்த்தியமான பேச்சினாலும் நடவடிக்கையாலும் பரத்தை கைப்பற்றினால் . பரத்தும் தான் செய்வது சரி தவறு என்று யோசிக்காமல் மாலினியிடம் நெருங்கி பழகினான். பரத்தும் கவிதாவும் விரும்புவது இருவருக்குள் மட்டுமே இருந்தது அவ்வளவு கண்ணியம் காட்டினாள் கவிதா. ஆனால் மாலினியும் பரத்தும் விரும்புபோது வகுப்பரை முழுவதும் வதந்திகள் பரவின. அதை கண்டு மனம் நொந்துப் போன கவிதா பரத்தை அழைத்து என்ன இது என்று கேட்டாள், “‘எதற்க்காக என்னை நேசிக்கிறதா சொன்னா ஆனால் இன்னிக்கு, நீ மாலினியை விரும்புறன்னு பேசிறாங்க, என்ன ஆச்சி நீ சொல்லு நான் உன்னை நம்புரேன் என்றாள் அப்பாவியாக, ‘கவிதா ,, ஆனால் அதற்கு பரத் ஐ எம் சாரி !! என்று சொல்லி நகர்ந்தான் அந்த வார்த்தையால் வாடிப்போனால், வதங்கிய மலர்போல ஆனால் வலியும் ஏமாற்றமும் அவளை வதைத்தது. நம்பி ஏமாந்து போனேமே என்று உள்ளுக்குள் குமுரினால் யாரிடமும் அவள் காதல் கதை சொன்னதில்லை ஆதலால் யாரிடமும் ஆறுதல் பெற முடியவில்லை. ஒருவாரம் முழுவதும் கல்லுரிக்கு செல்லவில்லை.

இதுவரை லீவு என்ற சொல்லுக்கு செவிசாய்க்காத தன் பிள்ளை இப்படி உறக்கத்திலே இருப்பதை கண்டு அஞ்சிய கவிதாவின் அம்மா அப்பாவிடம் தெரிவித்தாள்.” என்னங்க உங்க சிங்கம் ஒரு வாரமா காலேஜ் போகலை ஏன்னு தெரியல உடம்பு சரியில்லாத மாரி தெரியல, மனசில ஏதோ பிராப்ளம் என்னனு கேட்கறதுன்னு புரியல, அறிவு ஞானமும் உடையவள் இப்படி இருக்கிறா, அதா எதும் சொல்லல அவளா தன்னை குணப்படுத்திக்காவான்னு விட்டுட்ட நீங்க ஏதாவது பேசுங்க அவகிட்ட “ என்று கவிதா அம்மா கூறியதும் கவிதா அப்பாவிற்கு “திடுக்கென்று” ஆகியது உடனே தன் மகளுக்கு அழைப்பு கொடுத்தார் எல்லைப்படைத்தலைவர்,,
“என்னங்க மேடம் அப்பாவ மறந்துட்டீங்க போலவே, என கூற கண்களில் கண்ணிர் ததும்ப அப்படியில்லையப்பா, என மறுபதில் அளித்து கண்ணீர் துளிகளை சிந்தினால்….. !!!! ஆனால் அதனை மறுத்து கேப்டன் கூறிய வார்த்தை “நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்கன்னு தான், நாங்க எல்லையில நிக்கிறோம் ஆனால் நீங்க என்னம்மா இந்த தேசத்தோட தூண்கள்,,,, நீங்களே சிதறினால் நாங்கள் என்ன செய்ய என்று கலங்கி பேசிய வார்த்தையால் அதிந்து போன கவிதா ,,,! அப்பா ஐ எம் குட் அப்பா, நா கேப்டனோட பொண்ணு அப்பா, ஏன் அப்பா இப்படி பேசுறீங்க,, ஒரு பரிட்சையில ஃபெயிலாயிட்டேன் அப்பா அதா வருத்தம்”, நா கேப்டனோட பொண்ணு அப்பா,
ஏன் அப்பா இப்படி பேசுறீங்க,, ஒரு பரிட்சையில ஃபெயிலாயிட்டேன் அப்பா அதா வருத்தம்”, என்ற கவிதா சொல்லுக்கு “நீ பரிட்சையில் தோற்க்கும் பறவையல்ல ஆனால் எது உன்னை சுயர் அப்பா என்று ஒரு கம்பீரம் அறையை விட்டு எழுந்தது தோற்கடித்தாலும் ஒரு பீனிக்ஸ் பறவையை போல் பறந்துவா”!!! என்றார் .. சுயர் அப்பா என்று ஒரு கம்பீரம் அறையை விட்டு எழுந்தது அறைக்குள்ளிருந்த அவள் எப்போதும் படிக்கும் புத்தகங்களை வாசித்தால், இதுதான் காதலா, இவ்வளோதான் காதலா என்று !!! என்று தனக்குள் கூறி மன குப்பைகளை துடைத்தெரிந்தால் ,, தொடர்ந்து இரண்டாம் வருடம் படிப்பை முடித்தால் அடுத்தது வந்த மூன்றாம் வருட படிப்பை வெற்றிகரமாக முடித்தால், இடையில் பரத் பேச வந்த போது சாரி நான் பிஸி!! என்று முகத்தில் கூட முழிக்கவில்லை.
கல்லுரியில் மீண்டும் சிட்டானால் , பறக்கும் வண்டானால் அங்கு மிகபெரியா அழியா பதிவை நிகழ்த்தினால் கல்லுரி முழுவதும் அவள் பிரபலம் ஆனால் ஆண்டு விழாக்கள் மற்றும் கவியரங்கம் என அனைத்திலும் அவள் கோலோச்சி நின்றால் . அனைத்து மாணவர்களிடம் நன்மதிப்பை பெற்றால் . பரத் என்ற ஒருவரை தன் வாழ்நாளில் சந்திக்காதது போல் நடந்துகொண்டால். கல்லுரி இறுதி வருடம் அவள் கனகட்சிதமாக தேர்வை எழுதினால், தொடர்ந்து மூன்றாண்டுகள் கல்லுரியை தன் கூரிய திறனால் குணத்தால் கட்டி ஆண்டவள் பிரியா விடைகொடுத்தாள் அவளை வழியனுப்ப கல்லுரியே திறண்டது. காரணம் அவளுடைய அன்பு மூன்றாண்டுகள் அவள் நடந்து கொண்ட விதம் என அனைத்தும் அவளை மறக்க முடியாமல் செய்தது. தன்னுடைய தந்தையைபோல் தானும் இந்த தேசத்தை காக்க விஞ்ஞானியாகும் கனவை நினைவாக்கி மீண்டும் வருவதாக கூறி விடைபெற்றது பெண்ணறிவு .
மீண்டும் அந்த பெண்ணறிவும் , குணசீலியும் இந்த கல்லுரிக்குள் சிறப்பு விருந்தினராக வருவாள் என கல்லுரி கட்டிடங்களும் மரங்களும் காத்திருந்தன…….. !!!!!
வந்தாள் அவள் வளைய வந்த மரங்களின் மலர் தூவளில் முகம் மலர்ந்தாள்…
More Stories
బామ్మ కథ “బంగారు మురుగు”
చంద్రగిరి శిఖరం
అజరామరమైన అమరావతి కథలు..