September 29, 2023

Tamil culture to honour an excrete part 2

ஐய்யிய… மாட்டு சாணியை எப்படி தொடுவது?

திரையுலகில் ஒரு நக்கல் அடிக்கிற மாதிரி சொல்லணும்னா கையால தாங்க.

இந்த இடத்துல ரெண்டு படத்தோட காட்சிய குறிப்பிடுகிறேன்.

‘அதிசயப் பிறவி’ படத்துல நம்ம தலைவர் ரஜினிகாந்த் வீட்டு வேலை எல்லாம் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுல ஒரு பகுதி வந்துட்டு மாட்டு சாணிய வறட்டியா தட்டுவது ஒரு வேலை. அந்த வேலைய ரொம்ப ஜாலியா கிரிக்கெட் விளையாடுற மாதிரி சூப்பரா நடித்திருப்பார். பந்து போடுற மாதிரி ஆக்சன் செஞ்சுட்டு செவுத்துல மாட்டு சாணி வறட்டி அடிக்கிறத

“போல்ட் கௌரி போல்ட்” அப்படின்னு உற்சாகமா சொல்லி கொண்டாடுவார்.

‘என்றென்றும் புன்னகை’ படத்தில் லொள்ளு சபா சாமிநாதன் மாட்டு சாணியை பத்தி ஒரு டயலாக் அடிச்சிருப்பாரு. “ரோட்ல பச்சையா ஒன்று இருந்தது கையில் தொட்டா பிசுபிசுன்னு இருந்தது நக்கி பார்த்தேனா ஒரே புளிப்பா இருந்துது என்னன்னு பார்த்தா மாட்டு சாணி நல்லவேளை நான் அதை மிதிக்கல” அப்படின்னு பெருமையா சொல்லிட்டு சிரிப்பார்.

Source: Super South Tamil Channel (YouTube.com)

இதுல என்ன சொல்ல வர்றேன்னா நம்ம பார்வையில் இருக்கு; மாட்டு சாணி ஒரு கழிவுனு எடுத்துக்காம அது ஒரு மருத்துவ குணம் கொண்ட கிருமிநாசினினு தெரிஞ்சுக்கனும்.

மாட்டு சாணத்தின் மகத்துவங்கள்

பஞ்சகவ்வியம்

பசுமாட்டை சம்பந்தப்பட்ட ஐந்து பொருட்களால் ஆனது பஞ்சகவ்வியம் பால் தயிர் நெய் கோமியம் மற்றும் சாணம். பஞ்சகவ்யத்தை உண்பதால் நம் உடல் சுத்திகரிக்கப்படுகிறது. குழந்தை பிறந்து புண்யாஹவாசனம் என்னும் வைதீக காரியத்தில் இந்த பஞ்சகவ்வியம் குழந்தைகளுக்கு தரப்படுகிறது.

விபூதி

பித்தன் (ஈசன்) சூட்டிக்கொள்ளும் சாம்பல் மயானத்திலிருந்து எடுத்தாலும் பித்தனை வழிபடும் பக்தர்கள் மாட்டு சாணத்தை (வறட்டி) எரித்தேச் சாம்பலாக்கி விபூதியாக இடுகின்றனர் என்று ஆகமமும் சாஸ்திரங்களும் கூறுகிறது.

PC: Sankaranarayanan

ஹோமம்

ஹோமம் மற்றொரு முக்கியமான வைதீக காரியம். எந்த ஒரு சாஸ்திரத்தின்படி விசேஷங்கள் செய்தோமாயின் ஹோமம் ஒரு பகுதியாக அமைகிறது. ஹோமத்தில் சாம்பல் ஆக்கப்படும் பல திரவியங்கள் சுவாசிக்கும் பொழுது நம் உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது. மகத்துவம் வாய்ந்த பசு சாணத்தை கொண்டு செய்யப்படும் வறட்டி இதற்கும் உபயோகப்படுத்துவதால் அந்தப் பகுதியில் உள்ள காற்றை சுத்தப்படுத்துகிறது.

PC: Sankaranarayanan


நாம் வாழும் நகரப்பகுதியில் மாட்டை வளர்ப்பதுதான் பெரிய பாடாக இருக்குமே தவிர மாட்டின் அனைத்துப் பொருட்களையும் உபயோகப்படுத்தி வளமான வாழ்க்கை வாழ்வோமாக.

%d bloggers like this: