September 29, 2023

Tamil culture to honour an excrete part 1

கழிவை போற்றும் தமிழர்கள்!!!

மாட்டுச் சாணம்…

PC: pixabay.com

வீட்டு முன் வாசல் முதல் பின் வாசல் வரை மாடத்தில் இருந்து முற்றம் வரை சாணியை போட்டே மொழுகுகின்றனர். வாசல் தெளித்து கோலம் போடுவது தமிழர்கள் மரபு. வாசல் தெளிக்கும் தண்ணீரில் சாணம் மஞ்சள்தூளை கரைத்து தான் தெளிப்பார்கள்.

சாணியை வாசல்ல தெளிச்சா அங்கயே கிருமிகளுக்கு கேட் போட்டுட்டு டாடா பைபை சொல்லிடும்.

ஆனால் வாசல் தெளிப்பதே இப்போ சந்தேகம்தான்…

வீடு என்பது சிமெண்ட் தரையும் மண் வாசலும் கொண்டு காணப்படும் ஆகையால் சாணத்தைக் கொண்டு மொழுகுவது வசதியாக இருந்தது.

தற்போது வீட்டை சுத்தம் செய்யும் மாப் ஸ்டிக் கொண்டே வாசலையும் தொடைக்கின்றனர் அபார்ட்மென்ட் வாசிகள். சாணத்தை வைத்து மொழுகினால் எல்லோரும் அன்று ஸ்கேட்டிங் தான் அடிக்க வேண்டும்.

சாப்பாட்டு விஷயத்தில் எச்சில் பத்து போன்ற வார்த்தைகள் தெரியுமா?

வயதில் மூத்தவர்கள் கையால் சாப்பிடும் பொழுது தன் கையை கூட எச்சில்படுத்தாமல் தூக்கி சாப்பிடுவர். கூடைப்பந்து விளையாடுபவர் கூட அவ்வளவு கரெக்டாக எல்லாப் பந்தும் கூடையில் விழுமா என்பது சந்தேகம் தான் ஆனால் இவர்கள் போடும் ஒவ்வொரு கைப்பிடி உணவும் கரெக்டாக வாயினுள் போட்டு லபக் லபக் என்பார்கள்.

அடுப்பேற்றி உணவு பண்டங்களில் உப்பு இடுவது மற்றும் வெந்த அரிசி இவைகள் பத்து என்று சொல்லப்படுகிறது. இவைகளை தொட்டால் தண்ணீர் தொட்ட பிறகே தயிரை தொடவேண்டும் தண்ணீரை அருந்த வேண்டும் என்பார்கள் வீட்டுப் பெரியவர்கள்.

இவ்வாறு உணவு அருந்திய இடம் எச்சல் பத்து கொண்ட இடமாகக் கருதப்பட்டு சாணி கொண்டு எச்சில் தேய்தால்தான் சுத்தம் என்பது வழக்கம்

மாட்டுச்சாணம் பூசணிப் பூவும் வைப்பதற்கு என்ன காரணம்?

சாணிக்கே எங்க போகுதுனு தெரில இதுல பூசணி பூ வேறையா!!!

தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் இறை வழிபாட்டுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அம்மாதத்தில் ஆண்டாள், மக்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என பல விதிமுறைகளை கொடுத்து வாழ்ந்தும் காட்டி உள்ளார்.

மார்கழி மாதம் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது வண்ண வண்ணக்கோலங்கள். பின் அதற்கு நடுவே வைக்கப்படும் மாட்டு சாணமும் பூசணிப் பூவும். இன்றைய கால கட்டங்களிலும் கிராமப்புறங்களில் இதைக் காணலாம்.

இந்தப் பூசணிப் பூ வைத்திருக்கும் வீடுகளில் திருமணமாகாத ஆண்கள் (அ) பெண்கள் இருப்பதை சுட்டிக்காட்டும். மார்கழி மாதத்தில் அதிகாலை பொழுதில் வீதியில் கீர்த்தனை செய்து கொண்டு வருவது வழக்கம். இதனைக் கண்டு நினைவில் வைத்துக்கொண்டு திருமணப் பேச்சுக்காக வருவார்கள்.

இதுவே அந்த காலத்தில் மேட்ரிமோனி.

மார்கழி மாதமானது குளிர் பொருந்திய காலம் நோய் நொடிக்கு உகந்த காலமாக இருப்பதால் மாட்டு சாணத்தை வீட்டின் முற்பகுதியிலேயே வைக்கின்றனர்.

மாட்டு சாணத்தில் என்ன அப்படி ஒரு மகத்துவம்???

மாட்டுச் சாணத்தில் இருக்கும் வேதியியல் பொருட்கள் கிருமி நாசினி சக்தி கொண்டது. அதுவே இப்பயன்பாட்டிற்கான காரணம்.

இந்த வேதியியல் பொருட்கள் மண்புழு உரத்திற்கு உகந்ததாக உள்ளது. மாட்டு சாணத்தைக் கொண்டு செய்யப்படும் மண்புழு உரத்தால் விவசாய மண்ணின் தன்மை மாறாது பயிரிட சத்தானதாக இருக்கிறது. அதோடு இந்த கிருமி நாசினி தன்மையால் பயிர்களை எந்தவித பூச்சியும் அண்டாமல் காக்கிறது.

PC: Kamya Balaji

ஊரடங்கு நேரத்துல சாணிக்கு எங்கு போகுதுனு நீங்க கேட்கிறது கேட்குது; சாணிய அப்பவே யூஸ் பண்ணிருந்தா இந்த கொரோனாவும் வந்திருக்காது ஊரடங்கும் வந்திருக்காது.

சாணம் காய்ந்து வரட்டியாகுவது தொடரும்.

%d bloggers like this: