நமச்சிவாய நாமத்தின் தாத்பரியத்தை படித்து பூரித்து அனுபவித்து மேலே தெரிந்துகொள்ள வந்துள்ள அனைத்து வாசக பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சிவபெருமான் என்றவுடன் அவரின் கழுத்தில் இருக்கும் நீல கண்டமும் அதனை சுற்றி இருக்கும் பாம்பு நினைவிற்கு வரும் அந்தப் பாம்பு அவரின் கழுத்தை மூன்று முறை சுற்றி இருக்கும் அந்த மூன்று என்னும் எண் முக்காலமான இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் குறிக்கும்.
இந்த சுருண்ட நிலையிலிருக்கும் நாகமானது இறைவனின் யோகநிலையில் எழும்பி உச்சியை அடைய குண்டலினி சக்தியை குறிக்கும். நடராஜரை சுற்றி இருக்கும் நெருப்பு ஜ்வாலை வட்டம் வாழ்க்கையின் வட்டத்தை குறிக்கும். நடராஜரின் தலையில் அணிந்திருக்கும் பிறைச்சந்திரன் படைத்தலின் காலத்தைக் குறிக்கிறது. கங்கை ஜலம் அறியாமையை அகற்றும்.
எம்பிரானின் ஆனந்த தாண்டவமாடும் ஸ்வரூபமே நடராஜர். அவரின் முகம் சாந்த ஸ்வரூபமாக ஒற்றைக்கால் தூக்கி மற்றொரு காலில் ஊன்றி ஆடினாலும் முகம் நேர்க்கோட்டில் அமைந்திருக்க தலை சமமாக நிற்கும். முகத்தின் இரு பக்கத்தில் இருக்கும் காதுகளில் அணிந்திருக்கும் காதணிகள் வெவ்வேறாக காட்சியளிக்கிறது. ஒன்று பாம்பு வடிவ வளையமாகவும் மற்றொன்று கனிவாய் குழையும் தோடாகவும் இருக்க சிவனில் சக்தி பாதி என்பது உணர்கிறது.
நடராஜரின் உருவத்தை பற்றி தெரிந்து கொண்டோம். அடுத்ததாக நடராஜருக்கு கூத்தன் என்ற பெயருண்டு. கூத்து என்றால் ஆடல் என்ற பொருள் இறைவன் ஆடல்வல்லான்னாக இருப்பதால் கூத்தன் என்ற பெயர் எம்பிரான் அது வழங்கப்பட்டது.

ஆணும் பெண்ணும் சேர்வது என்ற பொருளும் கூத்து என்ற சொல்லிற்கு உண்டு. இந்த பொருளை நடராஜருடன் இருவகையில் இணைக்கலாம். நடராஜர் உடன் சிவகாம சுந்தரியும் ஆடுகிறார்கள். மற்றொன்று சிவன் பாதி சக்தி பாதியாக அர்த்தநாரீஸ்வரராக ஆடுவதால் கூத்தன் என்று அழைக்கிறோம்.
அம்பலம் எனும் திறந்தவெளி சபையில் ஆடுவபவரை அம்பலவாணன் எனவும் சபையில் ஆடும் கூத்தனை சபேசன் என்றும் அழைக்கின்றோம்.
நடராஜரை சிதம்பரத்தில் அம்பலவாணன் ஆக இருக்கும் நடராஜர் என்பதால் தில்லையம்பலவாணன் என்று அழைக்கிறோம். சிதம்பரத்தில் நடனமாடலதற்கு முன்பு திருஉத்தரகோசமங்கை என்னும் தலத்தில் நடனமாடியுள்ளார் நடராஜர் என புராணங்கள் கூறுகிறது ஆகையால் அத்தலத்தில் ஆதி சிதம்பரேஸ்வரர் அருள்பாளிக்கிறார்.
மதுரையில் பாண்டிய மன்னனின் இறைவனிடம் தங்களின் கால் வலிக்கப் போகிறதே என்று வினவ கால்மாறி ஆடுமாறு கேட்டுக்கொண்டதன் பலனாக இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடுவது போல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் காட்சியளிக்கிறார் நடராஜர்.
நடராஜரின் மூர்த்தத்திற்கு ஏன் இவ்வளவு விளக்கங்களும் விமர்சனங்களும் என்ற எண்ணத்திற்கு பதில் அடுத்து வருகிறது.
— Abhinaya Madhavan
More Stories
పూల బతుకమ్మ(Floral Festival of Telangana) | కవీశ్వర్ కే. జయంత్ కుమార్
తలచితినే గణనాథుని…….
కరోనాలో మనం చేసుకున్న మట్టి గణపతినే పూజిద్దాం…