September 27, 2023

நடராஜர் என்னும் புதிரை தெரிந்து கொள்ளலாமா!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே!

“பித்தா பிறை சூடிய பெருமானே” என்று ஈசனை பித்தனாக்கி நாம் பித்தாக திரியாமல் சிலவற்றைக் காண்போமா!

உலக மக்களுக்கும் இறைவனுக்கும் ஆன உறவு சொல்லுக்கு அடங்காதது. அடிப்படையான உறவாக கருதப்படும் மக்களை படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களை செய்வது இறைவன்.  அந்த தொழில்களிலுக்குரிய தெய்வங்களான நான்முகன், ஹரி, ஹரன். ஆனால் சிவபெருமான் ஐந்து தொழில்களை செய்கிறார் என சமயக்குரவர் நால்வர் இயம்பியுள்ளனர்.

எம்பெருமான் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என ஐந்து தொழில்களையும் வெவ்வேறு வடிவங்கள் எடுத்து செய்கிறார். ஆனால் கூத்தன் எனும் நடராஜ வடிவில் இவ்வைந்து தொழில்களையும் ஒருங்கே செய்கிறார்.

Natarajar

புதிதான விஷயமாக இருக்கிறதே!

பித்தனைப் பற்றி பித்தாக உளறுகிறேன் என்று நினைப்பவர்களுக்கும் மற்றும் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று ஆவலுடன் காத்திருக்கும் அனைவருக்கும் விளக்கம் இதோ!

“பஞ்சக்ருத்ய பராயணன்” என்னும் சமஸ்கிருத சொல்லுக்கு ஐந்து தொழில் புரிபவர் என்று பொருள் அளிக்கும் நடராஜருக்கு பொருத்தமான சொல்லாக அமைகிறது. நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஐந்து தொழிலையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

‘ந’- நடராஜரின் இடது கரத்தில் இருக்கும் அக்னி சிவனை சம்ஹார மூர்த்தியாக ருத்ரனாக காண்பிக்கிறது. (அழித்தல்)

‘ம’- நடராஜர் பூமியில் ஊன்றி நிற்கும் வலது கால் திரோதண சக்தியை குறிக்கும். திரோதண சக்தி என்பதன் பொருள் ஈசன் யார் என்பதை மக்கள் அறியாமல் ஈசனே அதை மறைத்துக் கொள்கிறார். (மறைத்தல்)

வலது காலின் கீழே இருக்கும் அபஸ்மாரம் என்னும் அசுரன் மக்களின் அறியாமையை குறிக்கும்.

‘சி’- நடராஜரின் வலது கரம் உடுக்கை ஏந்தி ஆடலுக்குத் தேவையான ஒலி எழுப்புகிறது. ‘டம் டம் டம் டம்மரு பஜாரி’ ஈசனின் மீது பாடப்படும் பாடலானது டமரு ஏந்தியிருக்கும் ரூபனே உன் டமரூவிலாருந்துதான் பிரணவ நாதம் எழுந்ததோ!(படைத்தல்)

பிரணமம் மட்டுமல்லாமல் மொழியும் டமரூவில் இருந்துதான். தமிழ் மொழியும் சம்ஸ்கிருத மொழியும் வெளிவர தமிழை அகத்தியரும் சம்ஸ்கிருதத்தை பதஞ்சலியும் எடுத்து வளர்த்தனர். இவ்விருவரும் அந்த அந்த மொழிக்கு இலக்கணம் எழுதினர்.

டமரூ ஒலியை எழுப்பி நடராஜர் தன் ஆடலை ரசித்து உருவத்தை நோக்கினால் பிரபஞ்சத்தின் உண்மை புரியும் என்றும் ஒரு ஐதீகம் உள்ளது.

‘வா’- யானையின் துதிக்கை போன்று வளர்ந்து காணப்படும் நடராஜரின் இடது கரம் வலதுகாலை கைகாட்டி மனிதர்களுக்கு வழிக்காட்டி காக்கிறது. (காத்தல்)

‘ய’- ஆடலரசனின் வலது கரமோ அபயஹஸ்தமாக அனைவருக்கும் அருள் புரிகிறது. (அருளல்)

நமச்சிவாய நாமத்தில் இருக்கும் ஐந்து தொழில்களையும் கண்ட நாம் அவரின் உருவம் கூறும் மற்ற விளக்கங்களையும் காண உள்ளோம்.

– Abhinaya Madhavan

%d bloggers like this: