September 28, 2023

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் மகிழம் ஆமே!

benefits and features of mahilam flowers

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் மகிழம் ஆமே, என்னப்பா தெரிஞ்ச பாட்டுல மகிழம்னு புதுசான வார்த்தையை சேர்த்து இருக்கேன்னு பாக்கறீங்களா

#மகிழம் பூ

“மகிழம் பூவே உன்னைப் பார்த்தேன் மயங்கிப் போனேன்…

நினைத்துப் பார்த்தேன் நெஞ்சம் ஏங்கி உருகிப் போனேன்…”

பாடலை கேட்கவே புதுசா இருக்கு இல்லையா! ரொம்ப பழைய பாடல் 1969 ல வந்த பாடல். அதுவும் முன்னணி கதாநாயகனாக விஜயன் நடிச்ச புதிய அடிமைகள் படத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த சினிமாவையே தெரியாத பல பேர் இருக்க அப்போ; மகிழம் பூ அப்படின்னு சொல்லும் போது எவ்வளவு பேருக்கு தெரியும்! தெரியல இந்த அரியவகை பூவ பற்றி தான்  தெரிஞ்சுக்க போறோம்.

வேறு பெயர்கள்

ஆங்கிலத்தில் ஸ்பானிஷ் செர்ரி மெட்லர் மற்றும் புல்லட் உட். வகுளம் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.

தோற்றம்

ஓடிக்கொண்டே இருக்கிற இந்த காலகட்டத்தில் உட்கார்ந்து சாப்பிட கூட நேரம் இல்லாமல் நின்னு சாப்பிடற பழக்கம் வந்து போச்சு. பெண்கள் மட்டும் தான் தலைகுனிந்து நடப்பாங்க ஆனா இப்ப எல்லாரும் போன பார்த்துட்டு உலகத்துல என்ன நடக்குதுன்னு தெரியாமல் தலை குனிஞ்சு போறாங்க. கொஞ்சமான முழிச்சுகோங்க.

மற்ற மரங்களிலிருந்து இந்த மரத்தை எப்படி தெரிந்து கொள்வது?

Mahilam poo

வானளாவி வளரும் மரங்கள் அல்ல இது. மரங்களிடையே 52 அடி உள்ள சிறிய  உயரத்துடன் காட்சி அளிக்கக் கூடிய மரம். இதன் இலைகள் கரும் பச்சை நிறத்துடனும் ஓவல் வடிவத்திலும் காணப்படுகிறது. மரத்தின் பட்டை வலுவாக ஆங்காங்கே விரிசல் கொண்டு மற்ற மரங்களைப் போல் காட்சியளித்தாலும் இதற்கு மருத்துவ குணங்கள் உண்டு.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தானே வளர்கிறது. வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இலை, பூ, காய், விதை, பட்டை ஆகியன மருத்துவக் குணமுடையது.

பயன்பாடு

இதெல்லாம் தெரிஞ்சிட்டு நான் என்ன பண்ண போறேன் அப்படின்னு பலபேர் கேட்கிறது பச்சையா கேக்குது!

உங்க வீட்டு பக்கத்துல குப்பை எடுக்காம நாத்தமா நாறுதா? இல்ல மழை காலத்துல சாக்கடை வழிந்து மூச்சு விடக்கூட முடியாமல் தவிக்கிறீங்களா?

மகிழ மரத்தை நட்டு வையுங்கள். 

மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் மலர்கள் கொத்துக் கொத்தாக வெண்மை நிறத்தில் பூத்து நறுமணம் மிக்கவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். 

ஆன்மீகம்

பூ பூத்துக் குலுங்கும் போது நம்ம எல்லாரும் பயன்படுத்தி பார்த்து இருக்கோம் ஆனா இந்த மலரில் ஒரு விசேஷமான குணம் இருக்கு. வெள்ளையா பூக்கும் இந்த மலர் காய்ந்து பழுப்பா மாறின பிறகு பூஜைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

பாட்டும் பாடிப் பரவித் திரிவார்

ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில் 

காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே 

ஓட்டுந் திரைவாய் ஒற்றியூரே.

-சுந்தரர்.

திருவொற்றியூர், திருவண்ணாமலை,  திருஇராமனதீச்சரம், திருநீடூர்,  திருப்புனவாயில் ,திருக்காளத்தி முதலிய ஸ்தலங்களில் தலவிருட்சமாக மகிழமரம் அமைந்து இறைவனுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது.

மருத்துவ குணம்

வஜ்ஜிதந்தி என்று சொல்லப்படும் பல்பொடி அல்லது பேஸ்ட், அவற்றின் மூலப் பொருளே மகிழம் பூ. பற்களை சுத்தம் செய்து ஈறுகளை வலிமைப்படுத்தும் ஆற்றல் மகிழம் பூவில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பற்களில் வலி ஏற்படும் சமயத்தில் மகிழம் பூவை மருந்தாக பயன்படுத்தலாம்.

Mahilam

மூச்சுத்திணறல், குளிரூட்டல், ஆன்டெல்மிண்டிக், டானிக் மற்றும் காய்ச்சல் போன்ற வியாதிகளுக்கு தயாரிக்கப்படும் ஆயுர்வேதத மருந்துகளில் மூலப் பொருளாக மகிழத்தின் மரப் பட்டை காய் இலை மற்றும் பூ பயன்படுத்தப்படுகிறது. 

பூ காமம் பெருக்கும்; விதை குளிர்ச்சியூட்டும், நஞ்சு நீக்கும்.

தீராத வயிற்றுப் போக்கிற்கு மகிழம்பூ ஒரு நல்ல தீர்வை அளிக்கும்.

பார்வை குறை மற்றும் கண் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு மகிழம் பூவில் குணப்படுத்தும் தன்மை உண்டு.

%d bloggers like this: