September 28, 2023

Tanjore painting an Incredible Art

நேர்த்தியுலும் ,அழகியலும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் ஓவியக்கலை
| Tanjore painting an Incredible Art

By Ramprakash Saminathan

கலைகளில் ஓவியக் கலை என்பது ஒரு தனியிடம் கொண்டது. ரசனை கொண்ட மனதிற்கு அனைத்துமே கலைதான் .

ஓவியம் என்பது ஒரு உருவத்தின் ரீதியாக வருவது என்பதனால் நம் கருத்துக்கள் குவியும் பலருக்கு ஓவியம் என்பது ஒரு விதமான மன பாரத்தை இறக்கி வைக்கும் கலையாக இருக்கிறது.

மார்க்கண்டேயன் ஆக இருந்த நடிகர் சிவகுமார் கூட ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது நான் நடித்ததை விட எனக்கு ஓவியம் வரையும் போது தான் என் மனம் மிக இதமாகவும் திடமாகவும் இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அப்படி வந்த ஓவியங்களில் நமது பாரம்பரியமான தஞ்சாவூர் ஓவியங்களுக்கு ஒரு தனிசிறப்பு உண்டு இந்த காலத்தில் இருப்பவர்களுக்கு அந்த தஞ்சாவூர் ஓவியங்களைப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை தஞ்சாவூர் ஓவியம் என்பது ஒரு படத்தை அப்படியே நூறு ஆண்டுகள் 200 ஆண்டுகள் தாண்டி கெடாமல் பாதுகாக்க வைக்கும் ஒரு உன்னத கலை.

இன்று நமக்கு பலவிதமான வண்ண கலர்களில் கிடைக்கிறது ஏழு வண்ணங்கள் தாண்டி புதிது புதிதாக வண்ணங்களின் பெயரை சொல்லிக் கொண்டிருக்கிறோம் ஆனால் அன்றைய காலகட்டத்தில் செடிகளை வைத்தே , செடிகளின் வேர்களிலோ அல்லது விதைகளிலிருந்தோ வண்ணங்களை உருவாக்கி வந்தார்கள்.

இன்றைய த்ரீ டி , போர்டியாட் போன்ற ஓவியக் கலைகளுக்கெல்லாம் நம் தஞ்சாவூர் ஓவியங்கள் தான் முன்னோடி என்று கூறினால் கூட அது மிகையாகாது.

தஞ்சாவூர் ஓவிய கலை என்பது நமது பாரம்பரிய ஓவியங்களில் ஒரு தனி இடம் பிடித்திருக்கிறது.

சாந்த சொரூபமான அழகான தெய்வ உருவங்கள் இந்த ஓவியங்களின் பிரதானம்.

Picture Credit : My Mom’s Art gallery ( Smt.Mangalam Srinivasan )

மிகவும் அழகான தனித்துவமான சிற்பங்களை வடிப்பதில் ( தஞ்சாவூர் ஓவியங்களை வடிப்பதில் ) தனித்து விளங்குகின்றார்கள் அதிலும் நடராஜர் , அகிலாண்டேஸ்வரி, திருபுரசுந்தரி ,மகாவிஷ்ணு, காளிகாம்பாள், காஞ்சி பெரியவர் என்று அசத்தும் விதத்தில் இருக்கும் இவரது ஓவியங்கள்.

இந்த தஞ்சை ஓவியக் கலையை மட்டுமில்லாமல் பாரம்பரிய முறையான கோலங்கள் , ஸ்லோகங்கள் போன்ற பலவற்றை ஒரு சேவையாக கற்றுக் கொடுத்தும் வருகிறார்கள்.

அவரது மகளான பார்கவி சீனிவாசன் அவர்கள் “My mom’s art gallery” என்னும் பெயரில் இவர்களின் படைப்புகளை சந்தை படுத்துகிறார்.

சா.ரா

Picture Credit : My Mom’s Art gallery ( Smt.Mangalam Srinivasan )

வரையப்படும் பலகை , அதன் பின்னால் இருக்கும் நிறங்கள் , வரைந்த ஓவியத்தின் அழகியல், அசைவு போன்றவற்றில் உள்ள நேர்த்தி, அலங்கரிக்கப்பட்ட விதம் உதாரணமாக தங்க இழைகள், வெள்ளி இலைகள் அல்லது வர்ண ஒளிவீசும் கண்ணாடிகள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு படங்களைப் பார்க்கவே மிக பிரம்மாண்டமாகவும் மிகவும் ரசிக்கும் வண்ணம் இருக்கும்.

இந்தக் கலை நமது சோழர்களின் பாரம்பரியமாக இருந்தது. பின்னாளில் சரபோஜி மன்னரும் , மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களும் இக்கலையை ஆதரித்து வந்தார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்த கலையை அவர்கள் மிகவும் நேசித்தார்கள். அதுவரை இறைவன் கடவுள் சார்ந்த கலையாக இருந்ததை சற்று கமர்ஷியலாக மாற்றிவிட்டார்கள். சாதாரண மனிதர்கள் மன்னர்கள் போன்றவர்களையும் அவர்கள் பங்கேற்க வைத்து இக்கலையை சற்று மாற்றி விட்டார்கள்.

காலவெள்ளத்தில் இயற்கையான வர்ணங்கள் கிடைக்காததால் இப்போது கிடைக்கும் வண்ணங்களை வைத்து அதே நேர்த்தியான கலையை செய்ய முயற்சி செய்கிறார்கள் அப்போது பலா மரம் போன்ற மரங்களை வைத்து செய்து கொண்டு இருந்தார்கள் இப்போது மேலும் சிறிது மாற்றங்கள் வந்திருக்கிறது.

இந்த நவீன காலத்தில் இந்த கலையை பலர் மறந்து வரும் வேளையில் திருமதி மங்கலம் சீனிவாசன் அவர்கள், அவர்கள் கற்றுக் கொண்ட இந்த கலையை ஆன்லைனில் பலருக்கு கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.

தான் கற்றுக்கொண்ட கலையை இந்த தலைமுறையுடன் அழிந்துவிடாமல் பலருக்கும் கற்றுக் கொடுத்து அந்த கலையை இந்த தருணத்திலும் உயிர்ப்போடு வைத்திருப்பதில் அவர்களின் பங்கீடு மிகப் பெரியது .

Picture Credit : My Mom’s Art gallery ( Smt.Mangalam Srinivasan )

%d bloggers like this: