September 28, 2023

அன்று முதல் இன்று வரை பட்டு பேசும் பாரம்பரியம்!

# பட்டு நெசவு  #Silkwoven

அதி நவீன உலகம் ஆள் பாதி, ஆடை பாதியென அத்தியாவசிய தேவையான உடை அணிவதை  ஆடம்பர அழகு பொருளாகக் காலத்தின் கோலத்தில்  மாற்றிவிட்டோம். மாற்றங்கள் என்பது மாறாது தானே அந்த வரிசைகள் ஆதி முதல் இன்று வரை என்றும் மவுசு குறையாத பட்டு நெசவு தொழில்பற்றி அறிந்து கொள்வோம்.

thred

IMAGE CREDIT: SRAVNI 

நமது வீட்டில் விசேச காரியங்களான  திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட மற்ற திருவிழாக்களில் அதிக அளவில் மக்களால் பெருமளவில் அவரவர் பொருளாதார வசதிக்கேற்ப பட்டுத்துணிகள் வாங்கிப் பயன்படுத்துகின்றது.

பட்டுத்துணி என்றாலே நமக்குள்ள ஒரு பவுசு தரும்.  இயற்கையின் கொடை  பட்டு  ஆகும். கொஞ்சம் காஸ்ட்லியானது கலர் கலராக வண்ணங்கள் உடையது. தங்கம் மற்றும் வெள்ளி பார்டர்களில் அணிவகுக்கும்.   நம்மை அழகுபடுத்தும் இந்த பட்டானது பாரம்பரியமிக்க வரலாறு கொண்டது. மன்னர் காலம் முதல் இன்றைய மாடர்ன்  காலம்வரை பட்டு அணிவது என்றாலே தனி பிரியம் நம்மில் அனைவருக்கும் உண்டு. 

.jpg

IMAGE CREDIT: SRAVNI 

ஆமாம் நம்மை அழகுபடுத்தவும் இந்தப் பட்டுத் தயாரிப்பையும் அதன் சாராம்சத்தையும்  நாம் அறிய வேண்டும் பட்டுத் தொழிலில் பாரம்பரிய மிக்க குடும்பங்கள் நெசவு மூலம் செய்து வருகின்றன. மாடர்ன் யுகத்தில் மெஷின்கள் வந்துவிட்டன. ஆனால் கைத்தொழில் மூலம் செய்யும் பட்டுத் தொழிலுக்குப் பாரம்பரியம் உண்டு. அதுபற்றி அறிவோம் வாங்க, 

பட்டுத் தயாரிப்பு அப்படினா என்ன, ஆமாம் அதைப் பத்தி நான் ஏன் தெரிஞ்சுக்கணும் என்று பலர் கேட்பது புரிகின்றது. நம்மில் பலருக்கு சாதி, மதம், இனம் மொழி, பாரம்பரியம் ஆகியவை மாறுபடலாம். ஆனால் நாம் அனைவரும் திருமணம் என்றாலும் விழாக்கள் என்றாலும் வாங்க முன்னுரிமை கொடுப்பது, வீட்டில் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது,  நாம் வாங்கும் புத்தாடைகள்  முக்கியப் பங்கு வகிக்கும். 

எத்தனை எத்தனையோ ஆடைகள் வந்தாலும் பட்டுக்குரிய  மதிப்பு என்றும் இருக்கும். அது சரி இலையானது பட்டுப்பூச்சியின் கக்கூன் எனும் அது கட்டும் குட்டிலிருந்து  நமக்குக் கிடைக்கும்.  பட்டுப்பூச்சி தன்னைச்சுற்றி உருவாக்கும் நிலைக்குக் கக்கூன் என பெயர் உண்டு. பட்டு இலைக்கு நிறம் ஏற்றித் தறி கொண்டு துணி  உருவாக்குகின்றோம்.

கைத்தறி, விசைத்தறி ஆகிய ஆகியவை கொண்டு பட்டுத் துணியால் செய்யப்படுகின்றது. பட்டுக்கு என பாரம்பரியமிக்க தயாரிப்பு இடங்கள் இருக்கின்றது காஞ்சி பட்டுக்கு பாரம்பரியம் கொண்டது. காஞ்சிபுரம் மற்றும் கும்பகோணம் அய்யம்பேட்டை தஞ்சை பட்டுத் திருவண்ணாமலை பட்டு ஆரணி பட்டுத் திருபுவனம் போன்ற இடங்களில் எல்லாம் பட்டுத் தயாரிப்புகள் மிகுந்து காணப்படுகின்றன

%d bloggers like this: