Kovai Girl Makes Lakhs despite “Lockdown” !
By Ramprakash Saminathan
Picture Credit : hmtv ( YouTube channel )
கொரொனா லாக் டவுனை சரியாக பயன்படுத்திக் கொண்ட கோயம்புத்தூர் மாணவி .
கலை மிக மிக ஒரு அருமையான விஷயம் ! “கலை அள்ளி அள்ளிப் பருகக் கூடிய அமிர்தம் அடா அது ” என்று நமது பழைய தமிழ் சினிமாவில் ஒரு வசனம் கூட வரும் , அது முற்றிலும் உண்மை.
இன்றைய காலகட்டத்தில் அந்தக் கலைக்கு எப்படி நவீன வடிவம் கொடுப்பது என்பது தான் பெரிய விஷயம்.
நம் சிறுவயது வரலாற்று பாடங்களில் … ஹரப்பா , மொகஞ்சதாரோ நாகரிகத்தில் “டெரகோட்டா” பொம்மைகள் வைத்திருந்ததாக படித்திருக்கிறோம். “டெரகோட்டா” என்பது களிமண்ணால் செய்யப்படும் ஒரு கலை! பொம்மை வகைகள் , ஆபரணங்கள் , டீ குவளைகள் போன்றவைகள் இக்கலையில் அடங்கும்.
கோயம்புத்தூர் மாணவி ஸ்மிருதி இதை அழகாக பெண்கள் உடுத்தும்.
ஆபரணமாக மாற்றி அதை பெரிய அளவில் சந்தைப்படுத்தி உள்ளார். இத்தனைக்கும் அவர் பேஷன் டெக்னாலஜி முதலாமாண்டு தான் படிக்கிறார்.
அவரின் தந்தை சிவகுமார் ஸ்மிருதிக்கு வேண்டிய ஊக்கம் கொடுத்து வந்துள்ளார் சிறுவயது முதலே.
இந்த கொரோனா பொது முடகத்தை மிகச் சரியாக திட்டமிட்டு பயன்படுத்திக்கொண்டார் ஸ்மிருதி .
காலையில் புதுப்புது டெரகோட்டா படிவங்களை தயாரிப்பது பிறகு அதை வண்ணம் தீட்டுவது என்று ஒதுக்கி கொண்ட ஸ்மிருதி மாலை வேளைகளில் ஆன்லைனில் படித்து வந்துள்ளார்.
ஊர் முழுவதும் நேரமே போகவில்லை “ சோ போறீங்” என்று புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் சம்பாதித்து கொடுத்திருக்கிறார் ஸ்மிருதி !
இவரின் தயாரிப்புக்களை வாங்க , முன்பதிவு செய்ய ” ஆஸ்திரேலியா” உள்பட பல நாடுகளைச் சேர்ந்த பேஷன் நிறுவனங்கள் வரிசையில் நிற்கிறது. !
ஒவ்வொரு தயாரிப்பிற்கும் மெனக்கட்டு அது தனித்துவமாக இருக்க வேண்டும் என்று பாடுபட்டு வந்த ஸ்மிருதி இப்போது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
அந்த டெரகோட்டா ஆபரணத்தை தயாரித்து , அதிலும் தனித்துவமாக டிசைன்கள் செய்து , தேவையான வண்ணங்கள் தீட்டி எவ்வளவு மெனக்கெட்டாரோ ., அந்த அளவுக்கு சந்தைப்படுத்தலிலும் கவனம் செலுத்தினார் . வெற்றி பெறுவதற்கு இத்தகைய திட்டமிடல்களும் வேண்டும். அவர் ஆன்லைன் சந்தையை நாடியது அவரின் இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறுகிறார்கள்.
ஸ்மிருதி பலருக்கு முன்னுதாரணமாக மாறிவிட்டார்.
சா.ரா
More Stories
వైవిధ్యమైన సృజనాత్మకత ఈ కుంచె సొంతం…ఆర్టిస్ట్ శేషబ్రహ్మం | Artist Sesha Brahmam
ఉత్తమ ప్రతిభా కళాకారిణి – దోరడ్ల వెంకట సాయి గాయత్రి, నెల్లూరు, ఆంధ్రప్రదేశ్
A woman- She is clothed in strength and dignity | Priyanka Sarmalkar