March 25, 2023

பரதநாட்டியம்

பரதநாட்டியம்

பரதநாட்டியம்

By Abhinaya Madhavan

PC:Image byPashminu MansukhanifromPixabay

பொறுமையின் உருவே! நான் பாராட்டுப் பெற உன்னை மிதித்தாலும் நீ என்னை வளர வைக்கிறாயே…

ஏன் உன் கண்டத்தின் பெயரில் உள்ள கலை என்பதாலா!!!” பரதநாட்டியம்…

ஏன் உன் கண்டத்தின் பெயரில் உள்ள கலை என்பதாலா!!!” பரதநாட்டியம்…

  • ப-பாவம் (action) 
  • ர-ராகம் (music) 
  • த-தாளம் (beat)     

பரதத்தில் கருத்தை, உணர்வை உணர்த்தும் நடனம் அபிநயமாக கருதப்படுகிறது.  நான்கு விதமான அபிநயங்கள் உள்ளன. அவை ஆகார்ய அபிநயம், வாசிக அபிநயம், ஆங்கிக அபிநயம் மற்றும் சாத்விக அபிநயம் என்பனவாகும்.  ‘அபிநயதர்ப்பணம்’ என்னும் நூலில் நந்திகேஸ்வரர் இந்த அபிநயம் பற்றிக் கீழ்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

யதோ ஹஸ்தஸ், ததோத்ருஷ்டி
யதோ த்ருஷ்டிஸ், ததோ மன
யதோ மனஸ், ததோ
பாவோ யதோ பாவ ஸ்ததோ ரஸ

இதையே நம் தமிழ் மொழியின் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தன் கம்பராமாயணம் நூலில் மிதிலை படலத்தில் கீழ்வரும் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

கைவழி நயனஞ் செல்லக்

கண்வழி மனமும் செல்ல

மனம் வழி பாவமும்

பாவ வழி ரசமும் சேர

இவற்றின் அர்த்தம்: பரத நாட்டியத்தில் பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டும். கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும்.

பரத நாட்டியத்தில் கைமுத்திரைகள் முதன்மையாகக் கொள்ளப்படும். பரதநாட்டியம் தமிழ்நாட்டின் முதன்மை கலையாகக் கருதப்படுகிறது. கலையைக் கற்பிப்போம்… கலையை வளர்ப்போம்…

PC: Image byPashminu MansukhanifromPixabay

%d bloggers like this: