பாரதத்தின் ஒவ்வொரு தனிநபரும் விவசாயி
By Abhinaya Madhavan
PC: Kamya Balaji
விவசாயம் பாரதத்தின் நாடித்துடிப்பு என்று பலர் பேசுகையில்… எவ்வளவு பேர் அதனை சாத்தியமாக்கி உள்ளனர்!!! நீங்கள் வாழ்வது நகரப்புறமாக இருந்தாலும் ஒரு சின்ன தோட்டத்தை வைக்கலாம் அல்லது நடிகை ஜோதி.
கா அவர்கள் நடித்த ’36’ படத்தில் வருவதுபோல் மொட்டைமாடியில் பயிரிடலாம். ஒவ்வொரு தனி மனிதரும் எந்தவித முன்னேற்றத்தையும் செய்யாமல் இந்த நாட்டின் முன்னேற்றத்தை குறை சொல்வது சரியாகுமா???
விவசாயத்தின் முக்கியமான கட்டமான உரத்தை பற்றி காண்போம்…
மண்புழு உரம் (Vermicompost)
என்றால் என்ன?
மாட்டு சாணம் உதிர்ந்த இலை போன்ற தேவையற்ற பொருட்களை மண் புழுக்கள் உண்டு அது வெளிப்படுத்தும் எட்சம் உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. மண்புழு உரத்திற்கு ஏன் இவ்வளவு பவுசு?மற்ற ரசாயன உரத்தை பயன்படுத்தும்போது அந்த ஒரு அல்லது இரண்டு அறுவடைக்கு மணலின் தன்மை நன்றாக இருக்கக்கூடும். ஆனால் மண்புழு உரம் மணலின் தன்மையை குறையாமல் அதிகரித்துக்கொண்டே போக நாம் மணலை மாற்ற வேண்டும் என்ற அவசியம் இருக்காது.இதனை எவ்வாறு செய்யலாம்?ஒரு மீட்டர் அகலமும் அரை அடி ஆழம் கொண்ட தொட்டியை அமைத்து, கூழாங்கல் அல்லது செங்கல் அடித்தளமாகவும், அதன் மேல் மணல் பரவி, அதற்கு அடுத்த கட்டமாக தேவையற்ற பொருட்களான சாணம் இலைகளை இட்டு மண்புழுக்களை விட்டால் நமது உரம் தயாராகும். இட வசதிக்கு ஏற்றவாறு தொட்டியை கட்டிக்கொள்ளலாம். கிராமத்து புற விவசாயிகளாயின் தங்கள் நிலத்திலேயே ஈரத் தன்மையற்ற தண்ணீர் படாத இடத்தில் இதனை செய்யலாம். இதனை இன்னும் காட்சி பூர்வமாக பார்க்க வேண்டுமென்றால் ‘காப்பான்’ திரைப்படத்தை பார்க்கலாம். நம்ம அண்ணன் சூர்யா அவர்கள் அவர்களின் ஊர் மக்கள் மலத்தை கழிக்க தான் கட்டிய கழிப்பறையில் கடிப்பதற்கு இவர் பணம் கொடுத்து அந்த மலத்தை உரமாக்கி தம் பயிர்களுக்கு இட்டார்.
இதெல்லாம் பேசுவதற்கு நன்றாக இருக்கிறது செய்ய முடியுமா?
இந்தக் கேள்விக்கு பதிலாக நான் பார்த்த மனிதர் ஒருவரைப் பற்றி கூறப்போகிறேன். இவர் விவசாயி அல்ல இவர் வாழ்வது கிராமமும் அல்ல.
தன் பூஜை அறைக்கு தேவையான புஷ்பங்களை தன் தோட்டத்திலேயே விளைவிக்கும் ஒரு தனிமனிதர். அந்த மரங்கள் வாழ்க்கைம் முழுவதும் நமக்கு அடுத்த தலைமுறைகளும் பயன்படும் விதமாக மணலின் தன்மை குறையாமல் இருக்க மண்புழு உரத்தை பயன்படுத்துகிறார்.
சென்னை அடுத்து இருக்கும் பெருங்களத்தூரில் வாழும் இவர் அதே இடத்தில் வாழும் மற்றொரு மாட்டுக்காரரிடம் இந்த மண்புழு உரத்தை வாங்குகிறார். மாட்டு சாணத்தின் பயன்கள் பல, இந்த மண் புழுவும் சேர்ந்து அருமையான உரமாக மாறி அந்தத் தோட்டத்தின் மணல் வளத்தை சீரும் சிறப்புமாக காக்கிறது.
நம் வீட்டிலேயும் ஒரு விவசாயியை வளர்த்து விவசாயத்தை காப்போம்…
PC: Kamya Balaji
More Stories
பேரார்வமிக்க விவசாயி குமரன். த | Aspiring Farmer Kumaran D, Avadi, Chennai, Tamilnadu.
ప్రకృతిలో మనిషి..
వ్యర్థాలతో ఇంటితోట పెంపకం..