September 29, 2023

பருத்தி எடுக்கையிலே பலவாறு படும் விவசாயி!

பருத்தி பயிரிடுதல் இந்திய விவசாயத்தின் முக்கிய பணப்பயிற் விளைச்சல் ஆகும். இந்தியப் பருத்தி நூலில் இருந்துதான் திருப்பூர் எனும் பருத்தி உற்பத்தி ஆடை மற்றும் ஈரோடு, கோவை காட்டன் உலகம் நேர்த்தியான ஆடைகள் தயாரிக்கின்றது.

இத்தகைய பருத்தி பயிரிடும் முறை விவசாயிகள் மட்டுமே அறிந்திருந்த ஒன்று அது அவர்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கின்றது ஆனால் அந்த பருத்தி உடையை பலவாறு விளைச்சல் செய்பவரை விட நாம்தான் அதிகமாக விதவிதமாக அணிகின்றோம். நாம்தான் இந்த பருத்தி விளைச்சல் முறையை நாட்டில் உள்ள ஒவ்வொருத்தரும் தெரிஞ்சுக்கணும் அப்போதுதான் அதற்கான மரியாதையும் மதிப்பும் நியாயமாக கிடைக்கும் என்பது உங்களுக்கு ஒரு ஞாபகம் வந்திருக்கும்.

சினிமாவில் பார்க்கும் வாழ்க்கையல்ல பளப்பளப்பாக இருக்க, இது பருத்தி விளைச்சலைப் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டும். பந்தாவாக பவுசு காட்டும் நமக்கெல்லாம். வெய்யில் பட்டால் சுடும், வியர்வை வந்தால் வீக்காக நினைப்போம். விவசாயிக்கு வெய்யிலில் வெந்து சருகானால்தான் அவன் வாழ்க்கை மினுமினுக்கும்.

பருத்தி எடுக்கையிலே பல வாரா விவசாயி பாடுபட வேண்டும். அதற்கும் சில சமயம்தான் சரியான வருமானம் வரும். பருத்தி கரிசல் மண்ணில் தான் விளையும். வண்டல் மண்ணிலும் பருத்திக்கு ஒரு வாழ்வாதாரம் இருக்கின்றது. இந்த பருத்தி குளிர்காலத்தில் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதத்திலும் கோடைகால பயிராக பிப்ரவரி முதல் மார்ச் மாதத்திலும் மானாவாரி பயிராக செப்டம்பர் முதல் அக்டோபர் மாதத்திலும் விவசாயிகளால் வருடத்திற்கு மூன்று முறை பயிரிடப்படுகின்றது. மீம்ஸ் போட்டு மாம்ஸ் பேசும் நமக்கெல்லாம் மிடுக்கு வாழ்க்கை தெரியாது.

கடவுளுக்கு பால், பழம், அபிசேகம் தரும். கண்கண்ட கடவுளான விவசாயிக்குரிய விளைச்சல் வருமானத்தை தருகின்றோமா என சிந்தியுங்கள், நம்மைப் போல் விவசாயியும் நிலைத்தால் எதை சாப்பிடுவோம்.

பாதுகாப்பான பலத்துக்கு உரம்:

பருத்தி விளைச்சலுக்கு தொழு உரம், தழை உரம் கொடுத்து நிலத்தை சமன் படுத்துகிறார்கள். பருத்தி விதை 3 மீட்டர் இடைவெளியில் 3 சென்டி மீட்டர் ஆழத்திற்கு சிறப்பாக அமைத்து அதற்கு நீர் பாய்ச்சி வாய்க்கால் அமைத்து பராமரிக்கிறார்கள். பருத்தி விதைகள் பாத்திகள் ஒவ்வொன்றிலும் இரண்டு மீட்டர் இடைவெளியில் விதைகளை நன்றாக ஊன்றி தண்ணீர் பாய்ச்சுதல் வேண்டும்.

மண்ணில் வளம் குறைந்த இடத்தில் இந்த பருத்தி விதைகளை விதைக்கலாம். இந்த பருத்தி விதைகள் விதைத்து பத்தாவது நாள் முளைக்கும் அப்படி முளைக்காமல் இருக்கும் இடத்தில் நாம் வேறு ஒரு விதையை ஊன்றலாம்.

பருத்தி விளைச்சல் என்பது சும்மா இல்லைங்க ஒரு மாதத்திற்கு எட்டு முறை அல்லது 12 முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும் அதாவது நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும் இந்த பருத்தி முடிஞ்சு வரும்போது களைகளை நீக்கி அதற்கு தொழு உரம் அல்லது தழை உரம் கொடுக்க வேண்டும் தழைச்சத்து எந்த அளவுக்கு அதிகமாக கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு பயிர் விளைச்சல் இருக்கும் அப்போதுதான் பருத்தியில் பூவும் காயும் அதிகமாய் காய்க்கும்.

Image credit: Praveen Ram

பருத்தி விதைத்து 90 நாட்களுக்கு பின்பு அதற்கு ஊடுபயிராக உளுந்து அல்லது தட்டைப்பயிறு பயிரிடலாம் மாதத்திற்கு ஒருமுறை பருத்தி செடிகளுக்கு இடையில் உள்ள களைகளை நீக்க வேண்டியது அவசியமாகும். மேலும் இதற்கு தொழு உரம் அல்லது தழைச்சத்து உரம் கொடுப்பதனால் பருத்தியின் மகசூல் அதிகரிக்கும் பொதுவாக பருத்திச் செடிகளை இலைப்புள்ளி நோய் தாக்குகின்றது.

டிஜிட்டல் உலகில் கலர்புல்லாய் வாழும் நமக்கான முக்கிய கடமை ஒன்று எனில் நாம் கட்டும் சேலைக்கு கடவுளான விவசாயிக்கு ஒரு நன்றி நல்லதொரு விலையும் தருவோமாக.

சாவலான நோய்கள்:

கருத்துகளை நிலைகள் அதன் நடுப்பகுதியில் வெளிர் நிறத்தில் சருகு போல் இருக்கும், காய்கள் பாதிக்கப்பட்டு உதிரும் இதனை தடுக்க இயற்கை உரமான வேப்பம் புண்ணாக்கு கலந்து வேறில் கொஞ்சம் வைக்கலாம் அதேபோல் வேப்ப எண்ணெய் இரண்டு லிட்டர் தண்ணீரில் 50 கிராம் வீதம் கலந்து மருந்து அடிக்கலாம்.

பருத்தி பயிரிடும்போது பாத்திகள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.பருத்தியின் இலைகளில் சிவப்புநிற புள்ளிகள் காணப்பட்டால் அது என்னவென்று பார்க்க வேண்டும். பஞ்சு போன்ற பூஞ்சான் போன்ற தொற்றுக் கூடம் பருத்தியில் நோய் ஆகியவை தடுத்தல் முக்கியம்.

Image credit: Praveen Ram


நீர்பாய்ச்சுதல்:

நீர்த்தேக்கத்தை பருத்தி உற்பத்தியில் குறைக்கவேண்டும் பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றுவது அவசியம் ஆகும். பகுதிகளை சாம்பல் நோய் தாக்கத்திலிருந்து காக்கவேண்டும். பருத்தி விதைப்பவர்கள் தொடர்ச்சியாக பருத்தியை வைக்கக்கூடாது. பருத்தி மகசூல் என்பது சாதாரண காரியமல்ல சாமனியமாக சாதிக்க சாவால்களை எதிர்கொள்ள வேண்டும். விவசாயம் என்பது தேசத்தின் முதுகெலும்பு என்பது எப்படியும் அதுபோல் தேசத்தின் அவசிய பயிர்கள் குறித்து அடிப்படை அறிவு இருக்க வேண்டியது அவசியமாகும். இது குறித்து அறிந்து கொண்டோம் ஆனால் பருத்தித் துணிகளில் மகிமையும் அதற்காக பாடுபடும் விவசாயிகளின் மகிமை தெரிந்திருப்பது அவசியம் ஆகும்.

%d bloggers like this: